Thanjavur Corporation: மீசையை முறுக்கும் தஞ்சாவூர்..! தமிழ்நாட்டின் நம்பர் ஒன் - எதில் தெரியுமா? சாதித்தது எப்படி?

8 months ago 5
ARTICLE AD

Thanjavur Municipal Corporation: தமிழ்நாட்டின் நம்பர் ஒன் மாநகராட்சியாகவும், தேசிய அளவில் 14வது சிறந்த மாநகராட்சியாகவும்  தஞ்சாவூர் தேர்வாகியுள்ளது.

”தஞ்சாவூர் மாநகராட்சி”க்கு அங்கீகாரம்:

மாநகராட்சிகளின் செயல்பாடு குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும்  தணிக்கை செய்யப்பட்டு அதன் மதிப்பீடு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2024- 2025ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் நம்பர் ஒன் மாநகராட்சியாகவும், தேசிய அளவில் 14வது சிறந்த மாநகராட்சியாகவும்  தஞ்சாவூர் தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 41வது இடத்தில் இருந்த தஞ்சாவூர், தற்போது 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மத்திய அரசு சார்பில் விரைவில் விருதும் வழங்கப்பட உள்ளது.

தஞ்சாவூர் சாதித்தது எப்படி?

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் பொது இடங்களில் 240-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாநகரில் குடிநீர், பாதாள சாக்கடை உடைப்பு, கழிவுநீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே தீர்க்கப்படுகின்றன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் இருப்பும் கண்காணிக்கப்பட்டு, தடையில்லாமல் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே தஞ்சாவூர் மாநகராட்சி, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் மாநகராட்சியாக மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தினசரி 300 அழைப்புகள்:

கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1800 425 1100 என்கிற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் சராசரியாக 300 அழைப்புகள் வருவதாகவு, அவற்றிற்கு இரண்டு, மூன்று நாட்களில் தீர்வு காணப்படுவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளிக்கிறது. கடந்த ஓராண்டில் ஏறக்குறைய 11 ஆயிரம் அழைப்புகள் வந்ததில், 80 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகரில் குற்ற செயல்களும் குறைந்துள்ளன. தற்போது 255 கேமராக்கள் இயங்கி வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சாலை வசதி:

தஞ்சாவூரில் பெரியகோயில், சிவகங்கை பூங்கா, அரண்மனை, புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் என்று ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதனால் தஞ்சைக்கு வரும் வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் தஞ்சை நகர் பகுதியில் வாகனப் போக்குவரத்து எப்போதும் மிகுந்து காணப்படும்.  இதனால் சேதமடைந்து கிடந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,  மணிமண்டபம் பகுதியில் இருந்து மேரீஸ்கார்னர் மேம்பாலம் வரையுள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெரிய கோயில் பகுதி சாலை, ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை, மேம்பாலம் பகுதி வரை உள்ள சாலை என சீரமைக்கப்பட்டு புத்தம் புதிதாக மிளர்கிறது. இதனால் போக்குவரத்து எளிதாகியுள்ளது.

உபரியுடன் தஞ்சாவூர் மாநகராட்சி பட்ஜெட்:

தஞ்சை மாநகராட்சியில் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.15.38 கோடி உபரி நிதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளிலேயே அதிக உபரி நிதியுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கல் என மேயர் ராமநாதன் பெருமிதம் தெரிவித்தார். அதன்படி, மாநகராட்சியின் வரவு ரூ. 344.46 கோடியாகவும், திட்டச் செலவு ரூ. 328 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரூ. 50 கோடியில் சாலைகளை சீரமைக்கவும், ரூ. 13.5 கோடியில் மண்டல அலுவலகங்கள் கட்டவும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய கோயில் தேரோட்டத்திற்கு தேரோடும் 4 வீதிகளிலும் புதிய சாலைகள் போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article