Thangalaan Movie Review : அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதா தங்கம்? விக்ரமின் தங்கலான் பட விமர்சனம் இதோ

1 year ago 7
ARTICLE AD

தங்கலான்

கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்த தங்கத்தை எடுக்க வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்களின் உதவியை நாடுகிறார்கள்.

வேப்பூரில் கிராம மக்கள் தங்களுக்கென இருக்கும் சொந்த நிலத்தில் பயிற் செய்து வருகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் அவர்களின் பயிர்களுக்கு தீ வைக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அம்மக்கள் கட்ட வேண்டிய வரியை தான் கடிவிடுவதாகவும் பதிலுக்கு கிராம மக்கள் அனைவரும் தங்கள் நிலத்தை கொடுத்து அதில் பண்ணைக்கு வேலையாட்களாக வர வேண்டும் என்று கூறுகிறார்.

ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான் தங்கலான். தங்கலான் தங்கத்தை கண்டுபிடித்தானா? தங்கம் அவன் மக்களுக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையைப் பெற்று தந்ததா? என்பதே கதை.

மஞ்சள் பிசாசு என்று அழைக்கப்படும் தங்கத்தை எடுக்க அப்பகுதியில் வாழ்ந்த பட்டியலின மக்கள் பலியான வரலாற்றையும் இதே மக்கள் அந்நிலத்தின் பூர்வ குடிகளாக வாழ்ந்த வரலாற்றையும் நாட்டார் கதைசொல்லல் வழியாக இணைக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.

ஜமீன்தார்களின் அடக்குமுறையில் வேப்பூர் மக்கள் தங்கள் நிலத்தை இழந்து நிற்பதும் அவர்களிடம் இருந்து விடுதலை பெற ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதும் முதல் பாகமாகவும், அதே ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்த நினைக்கையில் அவர்களை எதிர்த்து தங்கள் நிலத்திற்காக போராடுவது இரண்டாம் பாகமாக தொடர்கிறது.

விமர்சனம்

வழக்கமான கமர்ஷியல் சினிமாவைப் போன்ற திரைக்கதை அமைப்பு இல்லை என்றாலும் தங்கலான் படம் காட்டும் மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காட்டப்பட்டிருக்கின்றன. நிகழ்காலமும் கடந்த காலமும் சேர்ந்து நடக்கும் பகுதிகள் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக திரள்கிறது.

ஜி.வி பிரகாஷின்  பின்னணி இசை படத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டே இருக்கிறது

இனிமேல் இப்படி ஒரு நடிப்பைப் பார்ப்போமா என்கிற அளவிற்கு சியான் விக்ரமின் நடிப்பு இருக்கிறது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி , ஹரி கிருஷ்ணன் என ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Read Entire Article