ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக முதல் ஆளாக விஜய் தான் புகார் கொடுத்தததாக தயாரிப்பாளர் திருமலை தெரிவித்துள்ளார்.

அவதார் எழுதி இயக்கிய கர படத்தில் மாஸ்டர் மகேந்திரன், சாஹிபா பாசின், ஜீவா தங்கவேல், கிமாயா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் மே 15ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் திருமலை, “ஒரு படத்துக்கு பின்னால் நிறைய பேரின் உழைப்பு உள்ளது. அந்த உழைப்பு தெரியாமல் போய் விடுகிறது. படம் எடுக்கவே தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டு வருகின்றனர். சினிமா யார் கையில் இருக்கிறது என தெரியவில்லை. படம் எடுப்பதும், அதனை ரிலீஸ் செய்வதும், வியாபார ரீதியாக வெற்றி பெற்ற வைப்பதும் கஷ்டமாக இருக்கிறது.

தொழில் ரீதியாக மட்டுமே பார்க்கப்படுவதால் சினிமா மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இந்த படத்துக்கு கர என்ற டைட்டில் தான் வர வேண்டும் இயக்குநர் மிகவும் யோசித்திருப்பார். ஆனால் அதே டைட்டிலில் தனுஷ் ஒரு படம் நடிக்கிறார். ஒரு முற்போக்கு சிந்தனையோடு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மாற்றத்தை உருவாக்ககூடிய இடத்தில் இருப்பது தான் அழகு.

அதனால் தான் நிர்வாகிகளை கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படத்துக்கும் டைட்டில் வைக்கப்பட்டு சென்சார் போயுள்ளது. ஒரு சாதாரண பிரச்னையை சரி செய்ய வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் இங்கு தான் பாகுபாடு பார்க்கிறது. சொந்த பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. 2022ல் டைட்டிலை பதிவு செய்தோம். அது கால அவகாசம் முடியப்போகுது, புதுப்பியுங்கள் என கூட சொல்லாமல் இன்னொரு படத்துக்கு
அதை வழங்கியிருக்கிறார்கள்.

எங்கு போனாலும் ஒரு படத்துக்கு பிரச்னை வருகிறது என்றால் அதை தயாரிப்பாளர் சங்கம் தான் வர வேண்டும். ஆனால் அந்த சங்கம் ஐந்தாக பிரிந்து விட்டது. ஜனநாயகன் படம் ஆன்லைனில் வந்து விட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்து, போலீசில் போய் புகார் கொடுக்கக்கூட தயாரிப்பாளர் சங்கத்தில் ஆட்கள் கிடையாது. ரூ.500 கோடி போட்டு எடுத்த படம் சர்வ சாதாரணமாக வெளிவருகிறது.

தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மொழியிலாவது இதுபோன்ற படம் திருட்டுத்தனமாக வெளியாவது தொடர்பான பிரச்னை கிடையாது. இதைக்கூட நம்மால் தடுக்க முடியவில்லை” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் படம் பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என பத்திரிக்கையாளர் கேள்விக்கு முதல் ஆளாக கடிதம் கொடுத்தது விஜய் தான். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். எல்லாம் ரெக்கார்டில் இருக்கிறது. அதன்பின் தான் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புகார் கொடுத்தது” என திருமலை கூறினார்.