Thai Amavasai 2025: தை அமாவாசை எப்போது? முக்கியத்துவம் என்ன? விவரம் இதோ!

10 months ago 7
ARTICLE AD

பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள தை மாதத்தில் வரும் அமாவாசை (Thai Amavasai) முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2025-ம் ஆண்டில் தை அமாவாசை எப்போது வருகிறது, சிறப்புகள் என்ன, ஏன் முக்கியமானது ஆகியவற்றை பற்றி காணலாம்.

தை அமாவாசை 2025:

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. திதி கொடுக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு தை அமாவாசை முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.

தை அமாவாசை எப்போது?

2025- ம் ஆண்டு தை அமாவாசை 29-ம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.

தை அமாவாசை - 29.01.2025 - புதன்கிழை

அமாவாசை திதி தொடங்கும் நேரம் - 28.01.2025 செவ்வாய் கிழமை இரவு 7:35 முதல்

அமாவாசை திதி முடியும் நேரம் - 29.01.2025 - புதன்கிழமை -மாலை 06.05 வரை

தர்பணம் கொடுக்கும் நேரம் என்ன?

சூரிய உதயத்தின்போது இருக்கும் திதி, நட்சத்திரன் அன்றைய நாளுக்கானதாக கருதப்படும். அதன்படு, 29-ம் தேதி தை அமாவாசை. அன்றைய தினம் திருவோணம் நட்சத்திரமும் இணைந்தே அமைந்துள்ளது. அன்று புதன்கிழமை என்பதால் காலை 07.30 முதல் 9 மணி வரையிலான நேரம் எமகண்டமாகவும், பகல் 12 முதல் 01.30 வரையிலான நேரத்தில் ராகு காலமும் உள்ளது. அதனால் இந்த நேரங்களை தவிர்த்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. பொதுவாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் உச்சி காலத்திற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தை அமாவாசை நாளில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடைந்து அவர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.

மேலும், தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தர்ப்பணம் செய்வது நல்லது ஆகும். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சொல்லப்படுகிறது.

தை அமாவாசையன்று அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள், தர்ப்பணம் வழங்குவார்கள். அதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும், தை அமாவாசையில் தான் முன்னோர்களின் இறப்பிற்கு பிறகான வாழ்க்கை நல்லப்படியாக இருக்கவும் பூவுலகில் உயிர் வாழ்பவர்களுக்கு அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில் பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் தை அம்மாவாசை அன்று  மீண்டும் அவர்கள் உலகத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது. சூரியன் சந்திரன் இருவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றை ஒன்று சந்தித்தபடி ஒரே வீட்டில் பயணிப்பதாக சொல்லப்படுகிறது.

தை அமாவாசை தர்பணம், விரதம்:

தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரதம் இருப்பது, புனித ஆறுகளில் நீராடுவது, கோயில்களில் வழிபாடு செய்வது, விளக்கேற்றுவது என முன்னோர்களின் நினைவாக அவர்களுக்கு உங்கள் அன்பை, மரியாதையை வெளிப்படுத்துவதுபோல வழிபாடுகளை செய்யலாம்.

Read Entire Article