Tesla: டெஸ்லாவின் 2வது ஷோரூம் ரெடி - சூப்பர் சார்ஜர்ஸ் அறிமுகம், என்ன வேகம்? எவ்வளவு கட்டணம்?

4 months ago 5
ARTICLE AD

Tesla Superchargers: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது, இரண்டாவது விற்பனை நிலையத்தையும் விரைவில் திறக்க உள்ளது.

டெஸ்லா சூப்பர்சார்ஜர் அறிமுகம்:

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் சூப்பர்சார்ஜிங் நிலையத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. கடந்த மாதம் முதல் விற்பனை நிலையத்தை திறந்த நிலையில், அதற்கான விரிவாக நடவடிக்கையாக சார்ஜிங் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மும்பையின் பி.கே.சி.யில் அமைந்துள்ள அதிவேக சார்ஜிங் நிலையம், டெஸ்லா நிறுவனம் நகரில் தனது முதல் ஷோரூமைத் திறந்த சில வாரங்களுக்குப் பிறகு செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகன பயன்பாட்டிற்கான வலுவான அடித்தளத்தை  உருவாக்குவதற்கான எலான் மஸ்க் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

சார்ஜ் செய்ய கட்டணம் எவ்வளவு?

One BKC அமைப்பில் விரைவான DC சார்ஜிங்கை வழங்கும் திறன் கொண்ட நான்கு V4 சூப்பர்சார்ஜிங் ஸ்டால்கள் மற்றும் நான்கு மெதுவான AC டெஸ்டினேஷன் சார்ஜிங் ஸ்டால்கள் உள்ளன. சூப்பர் சார்ஜர்களில் ஒரு kWhக்கு ரூ.24 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 kW என்ற வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். அதேநேரம்,  AC சார்ஜர்கள் 11 kW வேகத்துடன் ஒரு kWhக்கு ரூ.11 விலையில் உள்ளன.

The first Tesla Superchargers in India are now live ⚡️

📍Mumbai, One BKC pic.twitter.com/qaQAQgY5iM
— Tesla India (@Tesla_India) August 4, 2025

டெஸ்லாவின் சூப்பர்சார்ஜர் எவ்வளவு வேகமானது?

தங்களது சார்ஜிங் தொழில்நுட்பத்தின் செயல்திறன் தொடர்பான டெஸ்லா அறிக்கையில், “டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் மூலம் மாடல் Y காரை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 267 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா இடையே ஐந்து ஐந்து முறை பயணிப்பதற்கு போதுமானதாக இருக்கும்"

டெஸ்லா உரிமையாளர்கள் புதிய நிலையத்தில் தங்கள் வாகனங்களை இணைத்து, டெஸ்லா செயலி மூலம் தங்கள் சார்ஜிங் நேரத்தை (Session) நிர்வகிக்கலாம். இந்த செயலி நிகழ்நேர அப்டேட்கள், ஸ்டால் கிடைக்கும் தன்மை, எச்சரிக்கைகள் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் தடையற்ற கட்டணங்களை செயல்படுத்துகிறது, பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு சார்ஜிங் அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.

டெல்லியில் இரண்டாவது ஷோரூம்

இந்தியாவில் விற்பனையை தொடங்கியுள்ள டெஸ்லா நிறுவனம், மும்பையில் கடந்த மாதம் தனது முதல் ஷோ ரூமை தொடங்கியது. அதனை தொடர்ந்து தனது இரண்டாவது ஷோரூமை தலைநகர் டெல்லியில் உள்ள, ஏரோசிட்டி பகுதியில் வரும் 11ம் தேதி திறக்க உள்ளது. வேர்ல்ட்மார்க் 3 இல் அமையும் புதிய விற்பனை நிலையத்தில் டெஸ்லா கார் மாடல்கள் காட்சிப்படுத்தப்படுவதோடு, கார் வாங்க விரும்புவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் பிராண்ட் தொடர்பான விவரங்களை அறிவதற்கா இடமாகவும் செயல்பட உள்ளது. தற்போதைய சூழலில், இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் மாடல் Y காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

டெஸ்லா மாடல் Y: அம்சங்கள், விலை, விவரங்கள்:

டெஸ்லாவின் மாடல் Y ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் லாங் ரேஞ்ச் RWD என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பேஸ் மாடலான RWD எடிஷனின் விலை ரூ.59.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும், லாங் ரேஞ்ச் RWD விலை வேரியண்டின் விலை ரூ.67.89 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்-ரோடு விலைகள் முறையே ரூ.61.07 லட்சம் மற்றும் ரூ.69.15 லட்சமாக உயர்கின்றன.. RWD வேரியண்ட் 60 kWh அல்லது 75 kWh பேட்டரி பேக் கொண்டு சுமார் 295hp சக்தியை உற்பத்தி செய்யும் ஒற்றை மோட்டாருடன் வருகிறது. 60 kWh எடிஷன் 500 கிமீ ரேஞ்சையும், , அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் மாடல் முழு சார்ஜில் 622 கிமீ  ரேஞ்சையும் வழங்குகிறது.

Read Entire Article