Tesla Car : தமிழ்நாட்டிற்கு வரும் டெஸ்லா கார் தொழிற்சாலை? போட்டி போடும் தூத்துக்குடி, ஓசூர்..‌

9 months ago 6
ARTICLE AD

Tesla Manufactureing Plant in India : "அமெரிக்கா முன்னணி நிறுவனமான டெஸ்லா கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது "

முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு அரசு:

தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தமிழ்நாட்டில் உற்பத்தியை பெருக்க வேண்டும், விரைவில் ட்ரில்லியன் டாலர் எக்னாமியை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதற்காக தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான, அரசு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

மீண்டும் வந்த ஃபோர்டு நிறுவனம்:

சமீபத்தில் இதற்காக அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து வந்திருந்தார். குறிப்பாக கார் உற்பத்தியில், நிறுத்தி இருந்த ஃபோர்டு நிறுவனத்துடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் விரைவில் உற்பத்தியை தொடங்க உள்ளது.

இதையும் படிங்க: Chennai Ford: 3 வருடம் காத்திருப்பு.. மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு.. காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை:

அதேபோன்று கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் மட்ட குழு அமெரிக்கா சென்றிருந்தது. அப்பொழுது முதலீட்டை இருப்பது குறித்து டெஸ்லா நிறுவனத்துடன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் எலான் மஸ்கின், டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்யும் டெஸ்லா:

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி எலான் மஸ்க்கை நேரில் சந்தித்து, முதலீடுகள் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பையில் டெஸ்லா கார் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை அமைக்கவும் டெஸ்லா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆந்திரா மாநிலம் மின்சார வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி, டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?

களத்தில் வந்த தமிழ்நாடு:

இந்தநிலையில் தமிழ்நாடு டெஸ்லா நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக தொழில் துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேபோன்று வியட்நாம் நிறுவனத்துடன் இணைந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டி வருகிறது. அந்த வரிசையில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை, தமிழகத்தில் வருவது அந்த நிறுவனத்திற்கு மற்றும் தமிழ்நாட்டிற்கும் நன்மை பயக்கும் என அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்லா நிறுவனம் தூத்துக்குடி அல்லது ஓசூர் பகுதியில் அமைப்பதற்கு பரிசீலன்களை வைத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

Read Entire Article