Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
4 months ago 9
ARTICLE AD
Tata Nexon Diesel EMI Scheme: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் மாடல் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா நெக்ஸான் டீசல்
நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி கார் மாடலாக டாடாவின் நெக்ஸான் மாடல் உள்ளது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் என பலதரப்பட்ட பவர்ட்ரெயின்கள் மற்றும் பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகியவை இதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஹேட்ச்பேக் மற்றும் செடான் மட்டுமின்றி சிறிய எஸ்யுவிக்களையும் தாண்டி, ஒரு வலுவான மற்றும் வசதியான எஸ்யுவி காரை விரும்புவோருக்கு டாடா நெக்ஸான் ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இந்நிலையில் லிட்டருக்கு சுமார் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கக் கூடிய இதன் டீசல் எடிஷனை, பஞ்ச் கார் மாடலின் விலையில் சொந்தமாக்குவது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நெக்ஸான் டீசல் எஸ்யுவி - விலை
4 பிரதான வேரியண்ட்களில் 60-க்கும் அதிகமான ட்ரிம்களில் டாடா நெக்ஸான் கிடைக்கிறது. இதன் விலை வரம்பு 7.37 லட்சத்தில் தொடங்கி 14.32 லட்சம் ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. குறிப்பாக டீசல் வேரியண்டின் ஆரம்ப ஆன் ரோட் விலையே 10 லட்சத்தை கடக்கிறது. அடிப்படை வேரியண்டான ஸ்மார்ட் ப்ளஸ் டீசல் எடிஷனின் விலையானது 10 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் எக்ஸ் - ஷோரூம் விலை ரூ.8.99 லட்சம் போக பதிவு கட்டணமாக ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாயும், காப்பீட்டு கட்டணமாக சுமார் 45 ஆயிரம் ரூபாயும் அடங்கும்.
பஞ்ச் விலையில் டாடா நெக்ஸான்
பஞ்ச் கார் மாடலின் விலை வரம்பானது 5.65 லட்சத்தில் தொடங்கி 10.6 லட்சம் ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. ஒருவேளை, இதன் எண்ட்ரி லெவல் காருக்கான தொகை கையில் இருந்தாலும், நெக்ஸான் போன்ற வலுவான, மைலேஜ் தரக்கூடிய டீசல் எடிஷனை வாங்க விரும்பினால், அதற்கான வலுவான நிதி திட்டங்களை ஆன் - ரோட் விலை அடிப்படையில் வங்கிகள் வழங்குகின்றன. அதன்படி, நீங்கள் ரூ.5.6 லட்சம் ரூபாயை டவுன் - பேமண்டாக செலுத்திவிட்டு, மீதமுள்ள ரூ.5.3 லட்சத்திற்கு கடனாக பெறு வங்கியின் மாதந்திர தவணை திட்டத்தை பயன்படுத்தலாம்.
நெக்ஸானுக்கான தவணை திட்டம்:
காரின் மொத்த விலையான ரூ.10.6 லட்சத்தில் ரூ.5.6 லட்சம் முன்பணமாக செலுத்திவிட்டு , ரூ.5.3 லட்சத்தை கடனாக வாங்குவதாக கருதுவோம். 7 ஆண்டுகளுக்கு 8 சதவிகித வட்டியுடன் மாதாந்திர தவணை முறையில் திருப்பி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.  மாதாந்திர தவணை ரூ.8,200 மட்டுமே ஆகும். 7 ஆண்டுகள் முடிவில் அந்த காருக்காக ஒட்டுமொத்தமாக நீங்கள் 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை செலுத்தி இருப்பீர்கள். எரிபொருள் விலையை கருத்தில் கொண்டால, நீங்கள் கூடுதலாக  வட்டிக்கு மட்டுமே செலுத்தும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை என்பது உங்களது சேமிப்பாகவே அமையும்.
இதையும் படியுங்கள்: Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
டாடா நெக்ஸான் - 24KM  மைலேஜ்
டாடா நெக்ஸான் ஸ்மார்ட் ப்ளஸ் டீசல் வேரியண்டில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டு லிட்டருக்கு 23.33 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் 15 முதல் 17 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலை பகுதிகளில் 20 முதல் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதகாவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். 44 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால், சுமார் 750 முதல் 900 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். ஈகோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ட்ரைவ் மோட்களும் இதில் வழங்கப்படுகின்றன.
டாடா நெக்ஸான் - 5 ஸ்டார் ரேட்டிங்
டாடா நெக்ஸான் - அம்சங்கள்
வசதியான மற்றும் சொகுசான பயணத்திற்காக இதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, 4 ஸ்பீக்கர்கள், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள்  ORVM-கள், நான்கு சக்கரங்களிலும் பவர் விண்டோக்கள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.
Read Entire Article