தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை கண்டித்து, பாஜக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, சென்னை பனையூரில் இன்று காலை அண்ணாமலை தனது இல்லத்தின் முன்பு கருப்பு சட்டை அணிந்து, கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கக்கூடிய ஊழலாக இருக்கும். டாஸ்மாக் ஊழல் வழக்கில் கைது நடவடிக்கை இருக்காது என தப்பு கணக்கு போட வேண்டாம். விரைவில் அமலாக்கத்துறை நடவடிக்கை இருக்கும்." என்று தெரிவித்தார்.