Tasmac Closed: வன்னியர் சங்க மாநாடு.. 4 மாவட்ட மது கடைகள் மூட உத்தரவு

7 months ago 5
ARTICLE AD

Vanniyar Sangam youth conference: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்க சித்தரை இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ள நிலையில், 4 மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் சங்க மாநாடு - Vanniyar Sangam Manadu 2025

ஆண்டுதோறும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் 12 ஆண்டுகளாக இந்த மாநாடு, நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வருட சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, இந்த ஆண்டு நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முதல்முறையாக வன்னியர் சங்க மாநாடு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

100 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மாமல்லபுரம் வரை அக்னி கலசம் பொறித்த வன்னியர் சங்க கொடிகளால் கிழக்கு கடற்கரை சாலை களைகட்டி உள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடல்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ள நிலையில், வட தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் சென்னை ஜிஎஸ்டி சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக மற்றும் மகாபலிபுரம் வழியாக படையெடுக்க உள்ளனர்.

எனவே மாநாட்டு வழிப்பாதை உள்ள பகுதிகளில் இயங்கும் டாஸ்மார்க் கடைகளை மூட டாஸ்மார்க் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 63 டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 36 மது கடைகள் மூடப்படுவதாக டாஸ்மார்க் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 டாஸ்மார்க் கடைகளும் மூடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோன்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிற மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மார்க் கடைகளில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article