TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!

11 months ago 7
ARTICLE AD

எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கும் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் சீட்டா தேர்வுக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. www.tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த முதுகலைப் படிப்புகளில் சேர, மாணவர்கள் டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது.

அதேபோல் முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம் ஆர்க். படிப்புகளில் சேர்வதற்காக CEETA தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

எதற்காக இந்தத் தேர்வு?

இந்தத் தேர்வின் மூலம்தான், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தேர்வர்கள் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை விண்ணப்பிக்கலாம்.

எம்சிஏ படிப்புக்கான டான்செட் தேர்வு மார்ச் 22ஆம் தேதி காலையும் எம்பிஏ படிப்புக்கு அன்று மதியமும் நடைபெற உள்ளது. சீட்டா தேர்வு மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://tancet.annauniv.edu/tancet/Procedure%20for%20Online%20Registration%202025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை சரியாகப் பதிவேற்ற வேண்டும்.

டான்செட் தேர்வுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சீட்டா தேர்வுக்கும் அதே கட்டணம்தான். எனினும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணைப்பில் பாடத் திட்டம், முந்தைய ஆண்டு கேள்வித் தாள்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு

தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289

இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com

Read Entire Article