Tamilnadu Roundup:ரூ.9000-த்தை நெருங்கும் கிராம் தங்கம் விலை, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை - 10 மணி செய்திகள்

8 months ago 8
ARTICLE AD

அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது என அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கு விற்பனை.

பொள்ளாச்சியில் 11ம் வகுப்பு மாணவியை கேரளாவிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாந்காரம் பட நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் அறிக்கை - தவறான தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம் என கோரிக்கை

கடலூர்: பிரபல உலர் பழங்கள் கடையில் பொருட்களை வாங்குவதைப்போலப் பேசி, சிசிடிவி-ஐ கவனிக்காமல் கல்லாப்பெட்டியில் கை வைத்த நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோயிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பா.ம.கவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு விழா நன்றாக நடைபெற வேண்டி, கும்பகோண கோயில்களில் வழிபாடு செய்த சௌமியா அன்புமணி

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு - தமிழக மீனவர்களை தாக்கியதை தொடர்ந்து நடவடிக்கை

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் அட்டை உற்பத்தி செய்யும் ஆலையில் தீ விபத்து

ஈரோடு: வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து தாக்கியதில் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

Read Entire Article