தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பம் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பாமக தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் நிறுவனர் ராமதாஸிற்கு இல்லை என அன்புமணி விளக்கம்

“ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?” -மனோ தங்கராஜ், திமுக எம்.எல்.ஏ

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல வரும் 15ம்தேதி முதல் 19ம்தேதி வரை அனுமதி மறுப்பு - ஆய்வு பணிகள்காரணமாக நடவடிக்கை

ஒடிஸா மாநிலம் ராய்க்கடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்.

குருத்தோலை ஞாயிறை ஒட்டி, தேவாலயங்களில் வழிபாடு செய்த கிறிஸ்தவர்கள்..! சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் ஏராளமானோர் திரண்டு வழிபாடு செய்தனர்.

ஆளுநர் ரவி, மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதையும், சமூகநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

திருவண்ணாமலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு! சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 03:30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது!

விருதுநகர் : ரயில் பயணிகளுக்கான உடனடி மருத்துவ உதவி வழங்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் என்ற கருவியை கண்டுபிடித்து அசத்திய அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவிகள்!