சென்னை மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் தெரு நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்

பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் அதிமுக செயற்குழு இன்று (மே.2) கூடுகிறது

கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

"12 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் பாஜகவை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை அதனால்தான் அவர்களுடன் கூட்டணி வைத்தோம்" - பொன்னையன், அதிமுக மூத்த தலைவர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, இன்ஸ்டாகிராம் வழியே கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த இளைஞர் கைது

வரும் 11, 12ம் தேதிகளில் சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை புறநகர் AC ரயில் சேவை 3-லிருந்து 8 ஆக அதிகரிப்பு

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ரசவாதி படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

புலி பதுங்குவது பாய்வதற்குதான். எனவே என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம் - டிடிவி தினகரன்

பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது.

கடலூர்: திட்டக்குடி அருகே கள்ளநோட்டு அச்சடித்த விவகாரத்தில், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த விசிக பிரமுகர் செல்வம் ஒரு மாதத்திற்கு பின் கைது

சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதி கொலை - 10 சவரன் நகை திருட்டுப்போனதாக போலீசார் தகவல்