Tamilnadu Roundup: திமுக பொதுக்குழு, தடபுடல் விருந்து, ஆளுநர் எதிர்ப்பு, சிலிண்டர் விலை குறைப்பு - 10 மணி செய்தி

6 months ago 5
ARTICLE AD

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள, சுற்றுலா மாளிகையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்

"ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. நீங்கள் பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள்" - கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர்களுக்கு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தட்டச்சர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைப்பு

பேரன் யாத்ராவின் பட்டமளிப்பு விழா புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

நீலகிரி: முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு உடற்கூராய்வு செய்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் - வனத்துறை

குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு, முல்லை பெரியாறு அணையின் தலை மதகில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு

வேலூர்: குடியாத்தம் வசந்த் & கோ கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை. ரூ.93,443 ரொக்கம், 16 தங்க நாணயங்கள் மற்றும் 40 வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார்.

Read Entire Article