சென்னையில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் லேசான அளவில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 2 முதல் ரூபாய் 3 வரை குறைய வாய்ப்பு என தகவல்

நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அறிவிப்பு; தொழிற்சாலைத் துறை தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம், நுகர்வோர் துறை தலைவராக திருச்சி சிவா நியமனம்

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்

பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கக்கோரி வலியுறுத்த திட்டம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் தொடர்ந்து திருட்டு – இளைஞரை கைது செய்தது போலீஸ்

விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான பணிகள் படுதீவிரம்; மாநாட்டு திடல் அருகே பிரம்மாண்ட போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டும் பணி தீவிரம்

தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு தீனி போடும் வகையில் இடம் தரக்கூடாது – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

அமைச்சரவையில் பங்குபோடுவது மட்டுமே ஆட்சிப்பகிர்வு அல்ல – திருமாவளவனுக்கு பாலகிருஷ்ணன் அறிவுரை

வேலூர் அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது – பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் போலீசார் நடவடிக்கை

திருப்பூர் அருகே குறுக்கே நாய் வந்ததால் வாகனத்தில் சென்ற கணவன் – மனைவி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு

ஜாமினில் வெளியில் வந்துள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்