Tamilnadu Roundup: 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மதுரையில் 3 பேர் மரணம் - 10 மணி சம்பவங்கள் இதுதான்

7 months ago 5
ARTICLE AD

தமிழகம் முழுவதும் ரூபாய் 527.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய குடியிருப்புகளுக்கும் அடிக்கல்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்த மழை - சென்னையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து - தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை வலையங்குளம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை; சதுரகிரிக்குச் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தம்

வேலூர் அருகே கிரானைட் கற்கள் ஏறிச்சென்ற லாரி நடுரோட்டில் பழுதானதால் 5 கி.மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல்

பெங்களூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழப்பு

மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

Read Entire Article