Tamilnadu RoundUp: 18 மாவட்டங்களில் மழை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாட்டில் இதுவரை

1 year ago 7
ARTICLE AD

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பைக் டாக்சியை அங்கீகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டில் பேறுகால உயிரிழப்பைத் தடுக்க 18 பேர் கொண்ட சிறப்பு குழு – சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அறிவிப்பு

வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நிறைவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; காலை முதல் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா இடையே நேரடி விமான சேவை; நேற்று முதல் மீண்டும் தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை – சாலைகளில் வெள்ளம் போல ஓடிய மழைநீர்

நெல்லை மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; விரிசல் விழுந்த வீடு – போலீசார் விசாரணை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பொறுப்பு அலுவலர்களை நியமித்தது தமிழ்நாடு அரசு

தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே செல்லும் சிறப்பு ரயில் இடையே இன்று முதல் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

உண்மைக்கு புறம்பான பயிர்காப்பீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – தஞ்சை மாவட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பேரணி

வானிலையில் மாற்றம்; உதகமண்டலத்தில் பூத்துக்குலுங்கும் நீலக் குறிஞ்சிப் பூக்கள் – ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியே ஆட்சி அமைக்கும் – விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேச்சு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மாநகராட்சி

Read Entire Article