Tamilnadu Roundup 02.09.2025: 7 ஆயிரம் கோடி முதலீடு.. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழகத்தில் இதுவரை

3 months ago 4
ARTICLE AD

ஜெர்மனி பயணத்தில் 7 ஆயிரத்து 020 கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி - ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நயினார் நாகேந்திரனின் தொழில்துறை சார்ந்த புரிதல் குழந்தைத் தனமாக உள்ளது - அமைச்சர் டிஆர்பி ராஜா

சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை

வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக- - கர்நாடக காவிரி எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை

நடப்பாண்டில் மட்டும் 6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கல்வி நிதிக்காக உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் காங்கிரஸ் எம்பி சசிகாந்த்

திருநெல்வேலியில் ஊருக்குள் புகுந்த கரடி - பொதுமக்கள் பீதி

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் ஐஎல்டி20யில் ஆட உள்ளதாக தகவல்

Read Entire Article