Tamilnadu Round Up: தவெக வேட்பாளர்கள், 121 இடங்களில் மோதும் DMK & ADMK, ரூ.1.22 கோடி - தமிழ்நாட்டில் இதுவரை

2 weeks ago 3
ARTICLE AD

121 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடிப் போட்டி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 133 தொகுதிகளில் உதயசூரியன் VS இரட்டை இலை நேரடி மோதல்

சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதி பட்டியலை இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கிறார்

அதிமுகவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - சென்னையின் 12 தொகுதிகள் உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் தவெக தலைவர் விஜய் - சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது

ஆண்டிப்பட்டி தொகுதியில் 2019 இடைத்தேர்தல், 2021 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து அண்ணன் மகாராஜன் (திமுக) -தம்பி லோகிராஜன் (அதிமுக) இடையே மூன்றாவது முறையாக நேரடி மோதல். இரு முறை பெற்ற வெற்றியை தக்க வைக்க மகாராஜனும், முதல் வெற்றியைப் பெற லோகி ராஜனும் களத்தில் தீவிரமாக பரப்புரை

NDA கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கீடு.
இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்டராங் போட்டி

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல். உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

திருவாரூரில் தியாகராஜசுவாமி கோயில் தேர் திருவிழா கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயில் சன்னதி வீதி மண்டபத்தில் உறங்கி கொண்டிருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு. படுகாயம்
அடைந்த மேலும் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது

Read Entire Article