Tamil Nadu election 2026: தேர்தல் கவுண்ட்டவுன் தொடங்கியது... கோவையில் வேகமெடுத்த ஆயத்தப் பணிகள்...

21 hours ago 1
ARTICLE AD

2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள சூழலில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கியமான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு இந்தியத் தலைமைத் தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமை தாங்கினார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், கோவை மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்று, தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சென்சிட்டிவ் பூத்களில் கூடுதல் கண்காணிப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பறக்கும் படைகள் செயல்பாடு, பணப் பட்டுவாடா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விதிமீறல்களை கண்காணிக்கும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதற்கான கூடுதல் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், கோவை மண்டலத்தில் தேர்தல் பணிகள் மேலும் வேகமெடுக்க உள்ளது. இறுதி கட்டமாக, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்கும் விழிப்புணர்வு பணிகள் மற்றும் வாக்கு இயந்திரங்கள் தொடர்பான சோதனைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Read Entire Article