Tamil Nadu Election 2026: தேனியில் வக்களிக்க செல்லும் முதியோருக்கு இலவச பேருந்து, 100% வாக்கு பதிவு செய்த வெள்ளிமலை!

1 hour ago 1
ARTICLE AD

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 காண வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கப்பட்ட  நிலையில்,  பொது மக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குபதிவை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில்  75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் இன்று வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான கம்பம் ,போடி ,ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1403 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வாக்களிக்க சென்று வர வசதியாக 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், பார்வை குறைபாடு உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவிலேயே முக்கிய வாக்கு சாவடியாக பார்க்கப்படும் 5 பேருக்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்கு சாவடி மையமாக ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை வாக்கு சாவடி உள்ளது. இந்த வாக்கு சாவடியில் 5 வாக்காளர்கள் மட்டும் தங்களது வாக்கை செலுத்தினர். தேனி மாவட்டத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு செலுத்தும் மையங்களில் வெள்ளிமலை வாக்குசாவடி காலை 8 மணிக்கெல்லாம் 100 சதவீத வாக்குகள் பதிவான வாக்கு சாவடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள் என வாக்குச்சாவடிக்கு 4 அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா். இதன்படி 344 வாக்குச் சாவடிகளிலும் 1,591 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதேபோல , தோ்தல் நடைமுறையைக் கண்காணிக்க 73 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் முன்னாள் ராணுவ வீரா்கள் 400 போ் பணியமா்த்தப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 359 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணிக்காக 1,854 அலுவலா்களும், கூடுதலாக 52 நுண் பாா்வையாளா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனர்.   போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் லாரிகள் மூலம் 346 வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் வாக்குபதிவானது நடந்து வருகிறது.

கம்பம் சட்டப் பேரவைத் தோ்தலில் 345 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் 35 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்தல் பணிக்காக 1,654 வாக்கு மைய அலுவலா்கள், 54 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

Read Entire Article