T20 World Cup, Super 8: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகள் - இந்தியாவுடன் மோதப்போகும் அணிகள் என்ன? எப்போது?

1 year ago 6
ARTICLE AD

T20 World Cup Super 8: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில், இந்தியாவுடன் எந்தெந்த அணிகள், எப்போது மோத உள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐசிசி டி-20 உலகக் கோப்பை:

ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் யார் யார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்:

புள்ளிப்பட்டியலின்படி, குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதேபோல குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, குரூப் - சி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தேர்வாகியுள்ளன. குரூப் டி பிரிவில் இருந்து தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

வரிசை எண்

குரூப் - 1

குரூப் - 2

1

ஆஃப்கானிஸ்தான்

இங்கிலாந்து

2

ஆஸ்திரேலியா

தென்னாப்ரிக்கா

3

வங்கதேசம்

அமெரிக்கா

4

இந்தியா

மேற்கிந்திய தீவுகள்

சூப்பர் 8 சுற்று குரூப் விவரங்கள்:

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் குரூப்-1, குரூப்-2 என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப்-1ல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப்-2 பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா,  அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற 3 அணிகள் உடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும், நான்கு அணிகள் அரையிறுத்க்கு முன்னேறும்.

இந்திய அணியின் போட்டிகள் எப்போது?

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் முதல் போட்டி, ஆஃப்கானிதான் அணிக்கு எதிராக வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. கென்சிங்டோன் ஓவல் பர்போடாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் இரண்டாவது போட்டி, வங்கதேசம் அணிக்கு எதிராக வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் கடைசி போட்டி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. செயிண்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்

Read Entire Article