T20 World Cup 2026: ஈடன் கார்டனில் சோகம்: இங்கிலாந்து வீரர் அடித்த 'சிக்ஸர்' பெண்ணின் கண்ணை பதம் பார்த்த பந்து..

1 month ago 8
ARTICLE AD

ஈடன் கார்டனில் நடந்த  இத்தாலி vs இங்கிலாந்து போட்டியின் போது சிக்சருக்கு அடித்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் கண்களில் நேரடியாகத் தாக்கியது அருகில் இருந்தவர்களை பதைபதைப்பு உள்ளாக்கியது.

கண்களை பதம் பார்த்த பந்து:

கொல்கத்தாவின் பெஹாலாவில் உள்ள பதக் பாராவில் வசிக்கும் 58 வயதான மல்லிகா மொண்டல் இங்கிலாந்து vs இத்தாலி போட்டியை காண கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு சென்றிருந்தார். மைதானத்தின் எல் பிளாக்கில் அமர்ந்திருந்த போது வில் ஜாக்ஸ் அடித்த பந்து நேராக அவரது கண்ணில் வந்துப்பட்டது, இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அவருக்கு பந்து  பட்டவுடன், அவரது கண்கள் மற்றும் மூக்கில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறத் தொடங்கியது. ரத்தம் பீறிட்டு வெளியேறுவதைக் கண்டு கேலரியில் இருந்தவர்கள் பதறினர், உடனடியாக, அவரது அருகில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், போலீசாரும், தரை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்

மருத்துவமனையில் சிகிச்சை:

வர் விரைவாக மீட்கப்பட்டு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மூக்கு மற்றும் கண்கள் இரண்டிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்கிரிக்கெட் மைதானத்தில் சிக்ஸர் அடிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி எவ்வளவு தீவிரமோ, அதே அளவு ஆபத்தானது ஒரு கணம் கவனக்குறைவு. இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இருப்பினும், மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் அடித்த பந்து கேலரியின் எந்த முனையில் விழும் என்று யாராலும் சொல்ல முடியாது.அவர் விரைவில் குணமடைய குடும்ப உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சூப்பர் 8-ல் இங்கிலாந்து:

இன்று நடந்த இப்போட்டியில் ஹாரி புரூக் தலைமையிலான முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர், 203 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இத்தாலி 178 ரன்களுக்கு போராடி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

Read Entire Article