செப்டம்பர் 10 உலகம் முழுவதும் பல அற்புதமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட நாள். கிரிகோரியன் நாட்காட்டியின்படி இந்த ஆண்டின் 253 வது நாள் இன்று. அப்படி இந்த நாளின் முக்கிய நிகழ்வுகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

World Suicide Prevention Day : உலக தற்கொலை தடுப்பு தினம்:

செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனநலத்தை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை பற்றிய உலகளாவிய பிரச்சினை என்ன என்பதையும், அதன் காரணங்களைப் பற்றிய தகவல்களை வழங்கவும், தற்கொலை எண்ணங்களுடன் போராடுபவர்களுக்கு உதவுவதற்கான வழிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

தற்கொலை எண்ணம் உடனடியாக கைவிடப்பட, உடனடி உதவி எண்களை தொடர்புகொண்டு பேசவும். மருத்துவ உதவியை தாமதிக்காமல் நாடவேண்டும்.

மற்ற முக்கிய செப்டம்பர் நிகழ்வுகள் இதோ

செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான திரைப்படங்கள்:

தி பேபிசிட்டர்: கில்லர் குயின், ஹெல்ரைசர், தி வொயர்ஸ், மாலிக்னன்ட், தி ஆர்ஃபனேஜ், குயின்பின்ஸ், அன்ப்ரெக்னென்ட், லெஜண்டரி, எவ்ரிபடி'ஸ் டாக்கிங் அபௌட் ஜேமி, வீ ஆர் ஃபேமிலி, எ மான்ஸ்டர் கால்ஸ் ஆகியவை செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான முக்கியமான திரைப்படங்கள்.

செப்டம்பர் 10, 2001:

இதே நாளில் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அலெக்ஸாண்ட்ரியா திரைப்பட விழாவில்'இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகர் என்று கௌரவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 10, 2023:

கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 55 நாடுகளை கொண்ட AU ஐ குழுவின் (G-20 இல்) புதிய உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் ஆனது.

செப்டம்பர் 10, 2002:

கடந்த 2002ல் சுவிட்சர்லாந்து ஐ.நா.வின் முழு உறுப்பினரானது. இதற்கு 54.6% உறுப்பினர்களை ஆதரித்தனர்.

செப்டம்பர் 10, 1608:

ஜான் ஸ்மித் ஜேம்ஸ்டவுனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதே நாளில் தான் ஜான் ஸ்மித் வட அமெரிக்காவின் ஜேம்ஸ்டவுன்ல் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

10 செப்டம்பர் 1972:

கடந்த 1972 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் பிறந்தார். இவர் நான்கு பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 10, 1972:

அமெரிக்காவின் பிரபல திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஆடம் ஹெர்ஸ் பிறந்த தினம் இன்று.

செப்டம்பர் 10, 1965:

நடிகரும் தயாரிப்பாளருமான அதுல் குல்கர்னி இதே நாளில் கர்நாடகாவில் கடந்த 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ரங் தே பசந்தி (2006), லால் சிங் சத்தா (2022) மற்றும் ஹே ராம் (2000) ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தவர்.