Stock Market Today: மத்திய பட்ஜெட் தாக்கல் -ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!

1 year ago 7
ARTICLE AD

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை,  மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகிய நிகழ்வுகளின் காரணமாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

காலை 10:30  மணி நிலவரப்படிமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 121.78 அல்லது 0.15% புள்ளிகள் சரிந்து 80,368.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 57.70 அல்லது 0.24% புள்ளிகள் சரிந்து 24,450.95  ஆக வர்த்தகமாகி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்க செய்ய தொடங்கியதும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது.

காலை 11.05 மணி நிலவரப்படி  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 99.47 அல்லது 0.13% புள்ளிகள் உயர்ந்து 80,616.73 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 21.95 அல்லது 0.090% புள்ளிகள் உயர்ந்து 24,535.30  ஆக வர்த்தகமாகி வருகிறது.

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

அதானி போர்ட்ஸ், லார்சன், ஐ.டி.சி,., அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கான்ஸ் ப்ராட், ஈச்சர் மோட்டஎஸ், க்ரேசியம், அதானி எண்டர்பிரைசிஸ், டி.சி.எஸ்., ஹெச்.யு.எல், என்.டி.பி.சி., சிப்ளா, கோடா மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, எம்& எம், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, நெஸ்லே, எஸ்.பி.ஐ.  உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.

ஓ.என்.ஜி.சி., ஸ்ரீராம் ஃபினான்ஸ், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, பி.பி.சி.எல்., டிவிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரன்ஸ், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், விப்ரோ, பவர்கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டெக் மஹிந்திரா,பஜாஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்,டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், ஹீரோ மோட்டர்காஃப், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எல், டெக், பாரதி ஏர்டெல், அப்பல்லோ  மருத்துவமனை, சன் ஃபார்மா, டாடா ஸ்டீல்,  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருந்தாலும், லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது  என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் மத்திய பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. லான் டர்ம் கேபிடல் கெயின்ஸ் டாக்ஸேசன், மற்றும் நடுத்தவரர்த்த நபர்களுக்கான வருமான வரியில் தளர்வு ஆகிய இரண்டிலும் எதிர்மறையான அறிவிப்புகள் ஏற்படும் எனில் அது பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட காரணமாக அமையும். அதே வேளையில் பட்ஜெட் நல்ல அறிவிப்புகள் இருந்தால் அது பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.

Read Entire Article