Stalin Reply to EPS: “ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்

7 months ago 5
ARTICLE AD

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்வது குறித்த நேற்று விமர்சித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பா பழனிசாமி. அதாவது, அவர் குடும்பத்திற்காகத் தான் செல்கிறார் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு தற்போது ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் என்ன.?

இது குறித்த தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடியிருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்காக ஒரு தேவை என்றதும் செல்கிறார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். அன்று 2ஜி-க்காக அப்பா டெல்லி சென்றார் என்றும், இன்று டாஸ்மாக்... தியாகி... தம்பி... என குறிப்பிட்டு வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் “தம்பி“ படுத்தும் பாடு என்று பதிவிட்டார்.

"மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை… pic.twitter.com/rD1qjOGch9
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 20, 2025

தரமான பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி இவ்வாறு விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு, "பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? என கேட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என் தனது பதிவில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

"பா.ஜ.க.வுடன்… pic.twitter.com/03W1rihtjv
— M.K.Stalin (@mkstalin) May 21, 2025

Read Entire Article