SSC MTS தேர்வை எழுதியவர்கள் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் நிலையில், பணியாளர் தேர்வு ஆணையம் விரைவில் வெளியிடப்படும் எனவும் , இந்த வாரத்திற்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. SSC MTS 2024 முடிவானது அதன் அதிகாரப்பூர்வ ssc.gov.in இணையதளத்தில் வெளியிடும். பிராந்திய இணையதளங்கள் SSC MTS மெரிட் பட்டியல் PDF ஐ மத்திய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகு வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு உங்களது தேர்வு எண் அவசியம் என்பதால், உங்களது ஹால்ட் டிக்கெட்டை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!

தேர்வு முடிவு: எப்படி,தெரிந்து கொள்வது ?

விண்ணப்பதாரர்கள் தங்கள் SSC MTS தேர்வு முடிவை பின்வரும் முறையில் பார்க்கலாம்

ssc.gov.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

அதிகாரப்பூர்வ வலது வழிசெலுத்தல் டாஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ள ‘முடிவு தாவலைக்’ கிளிக் செய்யவும்

SSC MTS ஹவால்தார் தேர்வு தாவலில் கிளிக் செய்யவும்

SSC MTS ஹவால்தார் முடிவு PDF இணைப்புகள் திரையில் கிடைக்கும்

கோப்பு இணைப்பைக் கிளிக் செய்து விரும்பிய ரோல் எண்ணைத் தேடவும்

Also Read: TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!

SSC MTS தேர்வு 2024:

SSC MTS ஹவால்தார் 2024 தேர்வானது, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 19, 2024 வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. SSC MTS விடைக் குறிப்புகளை நவம்பர் 29, 2024 அன்று ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வு முடிவானது, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது; எப்பொழுது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும், இந்த வாரத்திற்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் SSC MTS மெரிட் பட்டியல் PDF ஐ பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வு (PET)/உடல் தரநிலை தேர்வு (PST) க்கு அழைக்கப்படுவார்கள்.

Also Read: அனல் பறக்கும் டெல்லி தேர்தல்: ஆண்களுக்கும் இலவச பேருந்து: பாஜக-காங்கிரசுக்கு செக் வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.!