SSC CHSL 2024: +2 தேர்ச்சி போதும், 3,712 மத்திய அரசு பணியிடங்கள்- சிஎச்எஸ்எல் தேர்வு தேதி அறிவிப்பு

1 year ago 7
ARTICLE AD

சிஎச்எஸ்எல் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த மேல்நிலைப் படிப்பு அளவிலான இரண்டாம் கட்டத் தேர்வு நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.

குரூப் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படும்

சிஎச்எஸ்எல் முதல் கட்டத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று வெளியாகின. லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வை எழுதி இருந்த நிலையில், 41,465 தேர்வர்கள் அடுத்தகட்டத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்வர்கள், 3,712 காலி இடங்களுக்காக நடத்தப்படும் தேர்வை எழுத உள்ளனர். இதன் மூலம் குரூப் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிளர்க் மற்றும் டேட்டா என்ட்ரி காலி பணியிடங்களுக்காகத் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு எப்படி?

SSC CHSL Tier-II தேர்வு நவம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் 2 அமர்வுகளாகத் தேர்வு நடக்கிறது. கொள்குறி வகை வினாக்களைப் பொறுத்தவரை தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணியிடங்கள்?

எழுத்தர் (Lower Division Clerk LDC)

இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assitant - JSA)

தகவல் உள்ளீடு ஆபரேட்டர் (Data Entry Operator -DEO)

Data Entry Operator Grade A

ஊதிய விவரம்

Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) - Pay Level-2 ரூ.19,900 முதல் ரூ. 63,200)

Data Entry Operator (DEO)- Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 மற்றும் Level-5-ரூ.29,200 முதல் ரூ. 92,300 வரை

Data Entry Operator, Grade ‘A’-Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/

Read Entire Article