மூத்த தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா இன்று (செப்.11) மதுரையில் காலமானார்; அவருக்கு வயது 90. வயது மூப்பு காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ஓய்வில் இருந்தவரின் உயிர் இன்று பிரிந்தது.

1936ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்தவர் சாலமன் பாப்பையா. பேராசிரியர், எழுத்தாளர், நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் என பன்முகத் திறமை கொண்டவர். தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் சாலமன் பாப்பையா.

பன்முகத் திறனாளர்

2021ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

திருக்குறள், கம்ப ராமாயணத்துக்கு உரை எழுதியுள்ளார் சாலமன் பாப்பையா. எளியோருக்கும் புரியும் வகையில் தமிழை அனைவருக்கும் எடுத்துச் சென்றவர்.

தான் படித்த பள்ளிக்கு நன்கொடை

தான் படித்த மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சிப் பள்ளிக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை கொடுத்தவர் பாப்பையா.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு நடுவராகப் பணியாற்றி இருந்தார்.