SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...

3 weeks ago 5
ARTICLE AD

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ரஜினி - நெல்சன் கூட்டணி

கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.  இத்திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பிற மொழி சூபர் ஸ்டார்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தனர். மேலும், அனிருத்-யின் இசை படத்திற்கு முக்கிய பலமாக அமைந்தது. உலகளவில் சுமார் 600 கோடிக்கும் மேல் ஜெயிலர் திரைப்படம் வசூல் ஈட்டியதாக தகவல் வெளியானது.

ஜெயிலர் 2

இந்த நிலையில், ரஜினி - நெல்சன் வெற்றிக் கூட்டணி ஜெயிலர் 2 படம் மூலம் மீண்டும் இணைந்தது. ஃப்ர்ஸ்ட் லுக்கில் இருந்தே படக்குழு பிரம்மாண்டம் காட்டி வருவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களையும் சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டியிருந்த நிலையில், ரசிகர்கள் அதற்கு நல்ல வரவேற்பு அளித்தனர். ஜெயிலர் 2-ல் ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், மிர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, மோகன் லால், சிவராஜ் குமார், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

சோலோ ரீலிஸ்

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும், அந்த தேதியில் வேறு எந்த படமும் வெளியாகாததால் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 சோலோ ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

மோதலை தவிர்த்த தனுஷ்

முன்னதாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், அது நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான மரியாதை காரணமாகவும், வசூல் பாதிப்பைத் தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக படக்குழு தெரிவித்தது.

இன்று வெளியாகிறது ட்ரெய்லர்

ஜெயிலர் 2 வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வார கால அவகாசமே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Read Entire Article