பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா, தனது புதிய மற்றும் அதிநவீன எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் சிறப்பான ரேஞ்ச், அசத்தும் வடிவமைப்பு மற்றும் பிரீமியம் வசதிகளை கீழே விரிவாகக் காணலாம்.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் மிகப்பெரிய பலமே இதன் ரேஞ்ச்தான். இதில் மிகவும் சக்திவாய்ந்த, அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 647 கிலோமீட்டர் தூரம் வரை எந்தவித தடையுமின்றி பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த தேர்வாக அமையும். மேலும், மிகக் குறைந்த நேரத்தில் பேட்டரியை நிரப்பும் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.வெறும் 28 நிமிடத்தில், 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஏறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வேரியன்ட்டுகள்

ஸ்கோடா பீக் இ.வி. (Skoda Peaq EV) 3 வேரியண்ட்டுகளில் வருகிறது. முதல் லெவல் 60 வேரியண்ட் 63kWh பேட்டரியோடு, 459 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கிறது. மிட் லெவல் 90 வேரியண்ட் 91 kWh பேட்டரியோடு, 647 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கிறது. டாப் லெவல் 613 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கிறது.

கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு

வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஏரோடைனமிக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நேர்த்தியாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஸ்கோடாவின் தனித்துவமான சிக்னேச்சர் கிரில் அமைப்பு, கூர்மையான எல்.இ.டி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர ரன்னிங் விளக்குகள் காரின் கம்பீரத்தை கூட்டுகின்றன. பக்கவாட்டில் ஸ்போர்ட்டியான டிசைன், பிரீமியம் அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் எல்.இ.டி டெயில் லைட்டுகள் என இந்த கார் முற்றிலும் எதிர்கால வாகனத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

அதிநவீன வசதிகள்

உட்புற கேபினைப் பொறுத்தவரை மிகவும் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் தரத்திலான சீட் கவர்கள், மென்மையான டேஷ்போர்டு ஆகியவை காரின் உள்ளே ஆடம்பர உணர்வைத் தருகின்றன. மையப்பகுதியில் மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டிரைவருக்கான முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தமட்டில், அதிநவீன ADAS (Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் ஏர்பேக்குகள் என பயணிகளின் முழுமையான பாதுகாப்பு இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.