இந்தியாவில் ஒவ்வொரு கார் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மஹிந்திரா, டாடா, ஹுண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கொண்டுள்ள நிறுவனம் ஸ்கோடா.

Skoda தள்ளுபடி:

ஸ்கோடா நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதாந்திர சலுகை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், Skoda நிறுவனம் அக்டோபர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஸ்கோடா நிறுவனத்தின் எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.

1. Skoda Kylaq - மொத்தமாக ரூபாய் 90 ஆயிரம்

2. Skoda Kushaq - மொத்தமாக ரூபாய் 80 ஆயிரம்

3. Skoda Slavia - மொத்தமாக ரூபாய் 30 ஆயிரம்

Skoda Kylaq:

ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த Skoda Kylaq. இந்த காருக்கு அக்டோபர் மாத தள்ளுபடியாக டீலர் டிஸ்கவுண்டாக ரூபாய் 40 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 30 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்/ லாயல்டி சலுகையாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 80 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.95 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16.11 லட்சம் ஆகும்.

Skoda Kushaq:

ஸ்கோடாவின் மற்றொரு புகழ்பெற்ற கார் இந்த Skoda Kushaq. இந்த காருக்கு டீலர் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் மற்றும் லாயல்டி தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மொத்த தள்ளுபடி ரூபாய் 80 ஆயிரம் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.19 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.61 லட்சம் ஆகும்.

Skoda Slavia:

ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த Skoda Slavia. இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு கார்ப்பரேட்/ லாயல்டி தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.74 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.19 லட்சம் ஆகும்.