Siragadikka Aasai Serial Today: பிரௌன் மணிக்கு தெரிய வந்த உண்மை.. ரோகிணி மேல் சந்தேகம்.. சிறகடிக்க ஆசையில் இன்று!

1 year ago 8
ARTICLE AD

Siragadikka Aasai Today: 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஜூன் 21) எபிசோடில் மீனா பிரௌன் மணியை விரட்டிக் கொண்டு வர அவர் அவளிடம் இருந்து எஸ்கேப்பாகி ரோகிணியின் ஷோரூமுக்கு சென்று ஒளிந்து கொள்கிறார். அவரை அங்கே பார்த்ததும் ரோகிணியும் வித்யாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்ல வேலை அப்போது தான் மனோஜ் டீலரைப் பார்ப்பதற்காக வெளியில் கிளம்பினான்.

“ரோகிணி: நீங்க எப்படி இங்க வந்தீங்க?

பிரௌன் மணி : வித்யா பாப்பா சொல்லுச்சு மா, நீ இங்க தான் கடை திறந்து இருக்கன்னு.. அது தான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.  பூ கட்டுமே அந்த முத்துவோட பொண்டாட்டி, அது என்ன பாத்துட்டு விரட்டிட்டு வந்துச்சு.  ஆனா அது கிட்ட மாட்டிக்காம ஒரு சந்துக்குள்ள நுழைஞ்சு தப்பிச்சுட்டேன்.

ரோகிணி: ஐயோ! மீனா இங்க தான் வந்துகிட்டே இருக்காங்க. நாம தானே போன் பண்ணி பூ எடுத்து வர சொன்னோம்” என்கிறார்.

அந்த நேரம் மீனா ஷோரூமுக்கு வந்து விடுகிறாள். அவளைப் பார்த்ததும் ரோகிணியும் வித்யாவின் பதட்டமாகிறார்கள். பிரௌன் மணியை எங்கே ஒளித்து வைப்பது எனத் தெரியாமல் முழிக்கிறார்கள்.

“வித்யா: நீ நல்ல மாட்டிக்க போற ரோகிணி. இவரை எங்க மறச்சு வைக்கிறது என தெரியலையே..” என்கிறாள்.

மீனா பூ கொண்டுவந்து கொடுத்ததும் பதட்டத்துடன் அதை வாங்கிக் கொண்ட ரோகிணி மீனாவை கிளப்ப பார்க்கிறாள்.

“மீனா: நான் பூ குடுக்குற எல்லா இடத்திலேயும் நானே தான் சாமி படத்துக்கு மாட்டிவிடுவேன். நானே மாட்டிவிடுறேன்.

ரோகிணி: உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நானே போட்டுக்கொள்கிறேன்” என்கிறாள்.

பதட்டத்தில் சாமிக்கு ஒழுங்காக பூ போடமுடியாமல் ரோகிணி தவிக்க, மீனா அதை வாங்கி போட்டுவிடுகிறாள்.

”மீனா : சொல்ல மறந்துட்டேன். நான் உங்களோட மலேசியா மாமாவை பார்த்தேன்.

ரோகிணி : அவர் ஏன் இங்க வரப் போறார்? அவர் தான் துபாயில் இருக்கிறாரே.. நீங்க வேற யாரையாவது பார்த்து இருப்பீங்க” என சமாளிக்கிறாள்.

அந்த நேரம் முத்து செல்வத்துக்கு பிரிட்ஜ் வாங்குவதற்காக அழைத்து வருகிறான். அந்த நேரம் மனோஜூம் கடைக்கு வந்து விடுகிறான். அவர்கள் அனைவரையும் பார்த்ததும் வித்யா, பிரௌன் மணியை அங்கிருந்த ஒரு பிரிட்ஜூக்குள் மறைந்து உட்கார வைக்கிறாள்.

“முத்து: செல்வத்துக்கு பிரிட்ஜ் வாங்கணும். நீயே வந்து நல்ல பிரிட்ஜ் ஒன்றை காட்டு” என்கிறார்

எல்லா பிரிட்ஜையும் பார்த்த செல்வம் எனக்கு அந்த பிரிட்ஜ் தான் பிடித்து இருக்கு என சொல்லி வித்யா பிரௌன் மணியை ஒளித்து வைத்த பிரிட்ஜை காட்டிகிறான். அதைத் திறந்து பார்க்க போகும் போது வேகமாக சென்று அவர்களை தடுத்து நிறுத்தி மறைத்துக்கொள்கிறாள் வித்யா. ஒன்றும் புரியாமல் அனைவரும் வித்யாவை பார்க்கிறார்கள்.

“முத்து : தள்ளு! செல்வத்துக்கு அந்த பிரிட்ஜ் தான் புடிச்சு இருக்கு. அவன் அதைப் பார்க்கணும்.

வித்யா : இங்க எத்தனை ப்ரிட்ஜ் இருக்கு. வேற எதையாவது போய் வாங்கிக்கோங்க . இதை மட்டும் காட்ட முடியாது.

ரோகிணி: வித்யா அந்த பிரிட்ஜை வாங்கிக்குறேன் என சொல்லிட்டா. ஃபுல் கேஷ் கொடுக்குறேன் என சொல்லிட்டா” என்கிறார். அதைக் கேட்டு வித்யா திருதிருவென முழிக்கிறாள்.

முத்து எவ்வளவு சொல்லியும் முடியாது என்கிறாள் வித்யா. மனோஜூம் இன்ஸ்டால்மெண்டில் கொடுக்க முடியாது என்றதும் வேற கடையில் வாங்கி கொள்ளலாம் என அங்கிருந்து கோபமாக கிளம்பிவிடுகிறார்கள்.
பிரௌன் மணி வெளியில் வந்ததும் வித்யாவை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறார்.

“பிரௌன் மணி: மணிரத்னம் படம் என சொன்னதும் எல்லாம் பொய் தானே. ரோகிணி பாப்பாவுக்கு ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிட்டு இருக்கு. அதுக்காக தான் என்னை நடிக்க வைச்சு இருக்கீங்க என்பதை நான் எப்போதோ தெரிந்து கொண்டேன். வித்யா பாப்பா எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்கு. அதுக்காக நான் இதை செய்றேன். யார்கிட்டேயும் இதைப் பத்தி வெளியில் சொல்ல மாட்டேன்” என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

வீட்டின் மாடியில் நின்று மீனா மலேசியா மாமாவைப் பார்த்தது பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறாள். முத்துவிடம் அவரைப் பார்த்தது பற்றி சொல்கிறாள். இருவரும் ரோகிணி பற்றி சந்தேகத்துடன் பேசி கொள்கிறார்கள். அவர்கள் பேசுவதை ரோகிணி கீழே இருந்து கேட்டுவிடுகிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.

Read Entire Article