Siragadikka Aasai Serial July 25 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' எபிசோடில் ரோகிணி குழந்தையின் பிரசவம் சமயத்தில் நடக்கும் அத்தனை மாற்றங்களை பற்றியும் மிகவும் உணர்ந்து பேசுகிறாள். ஏற்கனவே பயத்தில் இருந்த ஸ்ருதி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

"மீனா : நீங்க என்னவோ குழந்தை பெத்தவ மாதிரி பேசுறீங்க?

ரோகிணி : என்னோட கிளைண்ட்ஸ் நிறைய பேர் சொல்லுவாங்க அதை வச்சு தான் சொன்னேன்.

ஸ்ருதி : எனக்கு குழந்தையே வேணாம். ரவிக்கு வேணும்னா அவனே பெத்துக்கட்டும். அது தான் நீங்க இரண்டு பேர் இருக்கீங்க இல்ல. உங்களுக்கு பொறக்குற குழந்தையை நான் என்னோட குழந்தையா நினச்சுக்குறேன்" என்கிறாள்.

அதை கேட்டு ரோகிணியும் மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

முத்து பாட்டியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். அண்ணாமலை விஜயா இடையே இருக்கும் பிரச்சினையை சரி செய்வதற்காக வீட்டில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி அழைத்து வருகிறான்.

"பாட்டி : இதையெல்லாம் ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை. சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் வரவிட்டு இருக்கமாட்டேன். நீ கூட என்கிட்டே சொல்லல மீனா?

மீனா : இல்ல பாட்டி சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல. நீங்க பிறந்தநாளுக்கு வந்து இருந்தீங்க. உங்க மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் சொல்லை" என்கிறாள்.

மாமியாரை பார்த்ததும் வாயடைத்து போன விஜயா "என்ன திடீரென வந்து இருக்கீங்களே?" என கேட்கிறாள்.

"பாட்டி : என்ன பண்ணி வச்சு இருக்க விஜயா? மனோஜை தலையில் தூக்கி வச்சு ஆடாதான்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரி பாருன்னு சொன்னேன் இல்ல.

விஜயா : மனோஜ் கஷ்டப்படும் போது பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல.

பாட்டி : அப்போ வீட்ல இருக்க எல்லாரையும் வைச்சு இதுக்கு என்ன பண்ணனும் என முடிவு செய்து இருக்கணும்" என்கிறார்.

மாடியில் இருக்கும் அண்ணாமலையை போய் பார்த்து பேசுகிறார் பாட்டி.

"பாட்டி : என்ன அண்ணாமலை. உனக்கு என்ன 25 வயசு தான் ஆகுதா? நீங்க இப்படி சண்டை போட்டா உங்க பிள்ளைகளும் அதை பார்த்து அவங்களும் இப்படி தானே சண்டைபோடுவாங்க. நீ விஜயாவை புதுசாவா பாக்குற. அவளுக்கு பக்குவமா சொல்லி புரிய வை. இப்படி பேசாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா?

அண்ணாமலை : அவ தப்பு பண்ணிட்டு உங்க மேலையும் மீனா அம்மா மேலையும் பழி போடுறா. அவ மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணும்.

பாட்டி : மீனா கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டாம். ஏற்கனவே மீனாவை மருமகளா ஏத்துக்கவே இல்ல. இப்போ மன்னிப்பு கேட்க சொன்ன அதுவே வைராக்யமா மாறி மீனாவை கொடுமை படுத்த ஆரம்பிச்சுடுவா" என்கிறார்.

விஜயாவை அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க சொல்ல அவரோ எல்லார் முன்னடியும் வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். பின்னர் அனைவரும் வந்ததும் விஜயா இனிமேல் இது போல செய்யமாட்டேன் என மன்னிப்பு கேட்கிறாள்.

பாட்டி மனோஜை அழைத்து கன்னத்தில் அறைந்து தட்டி கேட்கிறார். ரோகிணியையும் திட்டுகிறார். "நீ தான் அவனை திருத்த வேண்டும்" என்கிறார் பாட்டி.

முத்து அவன் திருந்த வேண்டும் என்றால் அவனுக்கு பொறுப்பு வர வேண்டும். அது அவன் அந்த 29 லட்சத்தை திருப்பி தர வேண்டும். மாசாமாசம் 50 ஆயிரம் கொடுத்து கடனை அடைக்க வேண்டும் என சொல்கிறான் முத்து. அதுவும் சரியான முடிவு தான் என அனைவரும் சொல்ல மனோஜ் தயங்குகிறான். விஜயா மனோஜை திட்டி சம்மதம் சொல்ல சொல்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.