விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி மனசு கஷ்டப்பட்டு ரவியிடமும் ஸ்ருதியிடமும் சொல்லி வருத்தப்படுகிறார். அவர்கள் இருவரும் அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

விஜயா அண்ணாமலையிடம் விசாரித்து கொண்டு இருக்க அந்த சமயத்தில் முத்து நெற்றியில் பட்டை அடித்து கொண்டு கத்திகொண்டே வீட்டுக்குள் வருகிறான். அவன் அப்படி செய்ததது பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கையில் பூசாரி மந்திரித்து கொடுத்தது போல எலுமிச்சை பழம் ஒன்றை காட்டுகிறான் முத்து.

"முத்து : வீட்டில் தங்க நகை கவரிங் நகையாக மாறியது பற்றி சாமியாரிடம் சொன்னேன். அவர் நகையை எடுத்தவன் இந்த ஏரியாவுக்குள் தான் இருக்கிறான். உங்கள் வீட்டில் கூட இருக்கலாம். இன்னும் 24 மணி நேரத்துக்குள் நகையை எடுத்தது யார் என்ற உண்மை தெரிந்துவிடும். அவர்களுடைய வாய் கோணிக்கும்" என பயமுறுத்துகிறான். இதை கேட்டு அனைவரும் ஷாக்காகிறார்கள்.

மீனா முத்துவிடம் அது எந்த சாமியார் என விசாரிக்க முத்து மீனாவிடம் உண்மையை சொல்கிறான். மனோஜும் விஜயாவும் நகையை மாற்றி வைத்ததால் அவர்களாகவே பயந்து இருவரின் வாயும் கோணிக்கொண்டது போல நினைத்து பயப்படுகிறார்கள். ரோகினி தான் வந்து அவர்களை சமாதானம் செய்து வைக்கிறாள்.

"ரோகினி : முத்து சொல்றதை எல்லாம் நம்பாத. அவனாவது கோயிலுக்கு போவதாவது. சும்மா உங்களை மிரட்டி பாக்குறான். நீங்களாக போய் மாட்டிக்குகப்போறீங்க. பயப்படாம இரு" என மனோஜை சமாதானம் செய்து வைக்கிறாள்.

ஸ்ருதியும் ரவியும் அந்த எலுமிச்சை பழம் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்த மீனாவை அழைத்து சாமியார் பற்றி விசாரிக்க மீனா ரவியிடமும் ஸ்ருதியிடமும் உண்மையை சொல்கிறாள்.

"ஸ்ருதி : இந்த ஐடியா நல்லா இருக்கே. ஒருவேளை மனோஜ் நகையை எடுத்து இருந்தா அவரே மாட்டிப்பார்.

ரவி : அப்படி அவன் எடுக்கலைனா?

மீனா : உங்க அண்ணன் எடுத்து இருப்பார் என அவர் தான் சந்தேகப்படுகிறார். என்ன நடக்குது என பார்க்கலாம் " என்கிறாள்.

மனோஜ் தூக்கம் வராமல் இதை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறான். சாமி அறையில் போய் பழத்தை பார்த்து பயப்படுகிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். மனோஜும் விஜயாவும் என்ன பிளான் பண்ண போகிறார்கள். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க போகிறார்களா அல்லது மாட்டிக்கொள்ள போகிறார்களா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.