நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். கமல் , அபிராமி , த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்த்ன் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. தற்போது தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் நாளை இப்படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு லைன் அப்

தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து வெவ்வேறு இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் லைன் அப்களை கீழே பார்க்கலாம்

எஸ்.டி.ஆர் 49

தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து உடனடியாக சிம்பு எஸ்.டி.ஆர் 49 படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் மற்றும் நகைச்சுவை நடிகரான சந்தானம் இப்படத்தில் நடிப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிராகன் பட புகழ கயடு லோகர் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

எஸ்.டி.ஆர் 50

சிம்புவின் 50 ஆவது படத்தை அவதே தயாரிக்க இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். முதலில் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருந்து பின் கைவிடப்பட்டது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சரித்திர கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது.

எஸ்.டி.ஆர் 51

சிம்பு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வரும் மற்றொரு படம் எஸ்.டி.ஆர் 51. டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விண்டேஜ் சிம்புவை இந்த திரைப்படம் மீண்டும் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படங்கள் தவிர்த்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்