தமிழ் திரையுலகின் வெள்ளித்திரைக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளது சின்னத்திரை. தொலைக்காட்சி தொடர்களுக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழில் நம்பர் 1 சீரியலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.

ஆடிஷனுக்கு போன ஸ்ருதி நாராயணன்:

இந்த சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதி நாராயணன் ஆடிஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபாச வீடியோவால் பெரும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடிஷன் குறித்து ஸ்ருதி நாராயணன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியதாவது, சீரியலுக்கு முன்னாடி வர எனக்கு வந்த ஆடிஷன்ஸ்ல கூட இவ்ளோ ஹைப் வந்தது இல்ல. ஆனால், சீரியலுக்கு பிறகு நான் ஆடிஷன் படத்துக்கும், சீரியல் ப்ராஜக்ட்னு ஏதோ ஒரு படத்துக்கான ஆடிஷனுக்கு நான் போயிருந்தேன். சீன் பேப்பர் கொடுத்துட்டு ரிகர்சல் பண்ண சொல்லிட்டாங்க. ஒரு அம்மாவும் சின்ன பையனும் என்டர் ஆனாங்க ஆடிஷன் ரூம்ல.

அந்த சம்பவம்:

நமக்கு நம்ம வேலை முக்கியம்னு படிச்சுட்டு இருந்தேன். ஆடிஷன் முடிச்சுட்டு நான் ரூம்ல இருந்து வெளிய வரேன். அந்த சின்ன பையன் நீங்க வித்யா தானே சிறகடிக்க ஆசையில வருவீங்கதானே அப்படினு சொன்னான். எனக்கு அந்த மொமண்ட்தான் பெருசா இருந்துச்சு.இந்த மாதிரி நமக்கு அங்கீகாரம் கான்பிடன்ட் தரும். அப்போ அந்த ப்ராஜெக்ட்டும் ஓகே ஆயிடுச்சு. இனிமே நமக்கு வாழ்க்கையில நல்லதான் நடக்கும். அந்த மாதிரி ஒரு ஃபுல் பாசிட்டிவ்.

இ்வ்வாறு அவர் பேசினார்.

துபாயில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ருதி நாராயணன் சென்னையில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும்போது இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி நாராயணன் கல்லூரி படிக்கும்போது யூடியூப் தொடர்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர், கார்த்திகை தீபம், மாரி சீரியலில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஸ்ருதி நாராயணனுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் மிகப்பெரிய வரமாக மாறியது. இந்த சீரியலில் இவரது வித்யா கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இணையத்தை அதிரவைத்துள்ள அந்த ஆபாச வீடியோ குறித்து ஸ்ருதி நாராயணன் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார்.