தண்டகாரன்யம்

இரண்டாம் உலகப் போரின் கடை குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தற்போது இயக்கியுள்ள படம் தண்டகாரன்யம். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் லர்ன் & டீச் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். அட்டகத்தி தினேஷ் , கலையரசன் , ரித்விகா, வினு சாம் , அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

சக்தி திருமகன்

அருவி , வாழ் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அருன் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள படம் சக்தி திருமகன். விஜய் ஆண்டனியின் 25 ஆம் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அவரே தயாரித்து இசையமைத்துள்ளார். வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரயரங்கில் வெளியாகிறது

கிஸ்

டாடா , ஸ்டார் , பிளடி பெக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கவின் . நடன் இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக கவின் நடித்துள்ள படம் கிஸ். அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சுவாரஸ்யமான ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகியுள்ள கிஸ் திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது

ஹவுஸ்மேட்ஸ்

ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த உருவாகியுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்தூல் லீ மற்றும் மாஸ்டர் ஹெண்ட்ரிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமம், நேரம் படங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது

இந்திரா

சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி , மெஹ்ரீன் , அனிஹா , சுனில் , கல்யான் மாஸ்டர் ஆகியோர் நடித்துள்ள படம் இந்தியரா . கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. விறிவிறுப்பான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்திரா திரைப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது