முதியோர்களுக்கு இலவச பேருந்து பயணம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் வகையில், விடியல் பயண திட்டம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதே போல முதியோர்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு முறை இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான இலவச பயண டோக்கன் வழங்கப்படவுள்ளது.

6 மாதத்திற்கான கட்டணமில்லா பயணம்

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 39 மையங்களில் வரும் 21 ஜூன் 2026 முதல் 31 ஜூலை 2026 வரை தொடர்ந்து காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்.

எந்த எந்த ஆவணங்கள் தேவை.?

அதன் பின்னர், 01.08.2026 முதல் 20.12.2026 வரை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகங்களில், அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.சென்னையை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை,

வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்விச் சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை, etc) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பித்து கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளல்லாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அடையாறு, திருவான்மியூர், மந்தவெளி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட 25 பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.