Sedan Cars: ரூபாய் 1.2 லட்சம் வரை விலை குறைப்பு.. அப்படியே விலை குறைந்த செடான் ரக கார்கள் என்னென்ன?

2 months ago 4
ARTICLE AD

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்த பிறகு ஏராளமான பொருட்களின் விலை மிகப்பெரிய அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கார்களின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை குறைந்துள்ள செடான் கார்களின் விலை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Honda Amaze:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று இந்த Honda Amaze கார் ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் அதிகபட்சமாக இந்த காரின் விலை ரூபாய் 1.2 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த Honda Amaze புதிய தொடக்க விலை ரூபாய் 7.41 லட்சம் ஆகும்.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட இந்த கார் 1199 சிசி திறன் கொண்டது ஆகும். 89 பிஎச்பி  ஆற்றலும், 110 என்எம் டார்க் இழுதிறனும் கொண்ட இந்த கார் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் ஓடும் ஆற்றல் கொண்டது.

2. Toyota Camry:

டொயோட்டோ நிறுவனத்தின் செடான் படைப்புகளில் முக்கியமானது  Toyota Camry கார் ஆகும். ஹைப்ரிட் வகை காரான இந்த கார் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 1.02 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த கார் Elegance மற்றும் Sprint Edition வேரியண்ட்களில் உள்ளது. இந்த காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 47.48 லட்சம் ஆகும்.

டொயோட்டோ கார்மி கார் 2487 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது ஆகும். 227 பிஎச்பி ஆற்றல் கொண்டது. ஆட்டோமேட்டிக் கார் இந்த கார் ஆகும். 5 பேர் அமரும் வசதி கொண்டது இதுவாகும்.

3. Maruti Suzuki Dzire:

மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்பு இந்த Dzire. சுவிப்ட் காரின் செடான் வகையில் வந்தது இந்த Dzire கார் ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த கார் 88 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. இதன் புதிய தொடக்க விலை ரூபாய் 6.26 லட்சம் முதல் ரூபாய் 9.31 லட்சம் வரையாக குறைந்துள்ளது.

இந்த கார் 1197 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆற்றல் கொண்டது. 1.2 லிட்டர் மற்றும் 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டது. 81.58 பிஎஸ் ஆற்றலும், 111.7 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது ஆகும்.

4. Tata Tigor:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Tata Tigor. செடான் ரக காரான இந்த Tata Tigor காரின் புதிய விலை ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 5.49 லட்சமாக குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் டாடா டிகோர் காரின் விலை ரூபாய் 81 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

இந்த கார் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை உள்ளடக்கியது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களை கொண்டது. 1.2 லிட்டர் பெட்ரோல் ரெவோட்ரன் எஞ்ஜினை கொண்டது. 5 சீட்டர் காரை உள்ளடக்கியது.  பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி வெர்சனிலும் இந்த கார் உள்ளது.

5. Hyundai Aura:

ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கியமான செடான் காராக Hyundai Aura கார் உள்ளது. இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 76 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இந்த காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 5.98 லட்சமாக உள்ளது.

1197 சிசி திறன் கொண்டது இந்த கார். 95.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் செடான் வகை கார்கள் இந்தளவு விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Read Entire Article