பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ விளையாட்டுத்‌ துறையில்‌ சாதனைகள்‌ படைப்பதற்கு ஏற்ப, அறிவியல்‌ பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும்‌ உணவுடன்‌ கூடிய விளையாட்டு விடுதிகள்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ கீழ்‌ 28 இடங்களில்‌ செயல்பட்டு வருகின்றன.

இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம்‌ இன்று (18.04.2025), www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதியில்‌ சேர விருப்பமுள்ள 7-ஆம்‌, 8-ஆம்‌, 9-ஆம்‌ மற்றும்‌ 11-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவிகள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மே 5 கடைசி

ஆன்லைன்‌ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம்‌ செய்வதற்கான கடைசி நாள்‌: 05.05.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும்‌. தேர்வுக்கு ஆன்லைன்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌.

மேலும்‌ தகவல்களுக்கு ஆடுகள தகவல்‌ தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில்‌ தொடர்புகொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்‌. விளையாட்டு விடுதியில்‌ சேர விரும்பும்‌ மாணவ / மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்‌ போட்டிகள்‌ வருகின்ற 07.05.2025 அன்று காலை 7.00 மணியளவில்‌ ஆண்களுக்கும்‌, 08.05.2025 அன்று காலை 7.00 மணியளவில்‌ பெண்களுக்கும்‌ கீழ்காணும்‌ விபரப்படி நடைபெற ஒருப்பதால்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பித்தவர்கள்‌ மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக்‌கொள்ளப்படுகிறார்கள்‌. இதற்கான தகவல்கள்‌ குறுச்செய்தி, வாட்ஸ்‌ஆப்‌ மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மாவட்ட அளவிலான தேர்வில்‌ தெரிவுசெய்யப்பட்‌ டவர்கள்‌ மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர்‌. அதன்‌ விவரம்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ www.sdat.tn.gov.in எனும்‌ அதிகாரபூர்வ இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.‌

விளையாட்டுத்‌ தகுதிகள்‌: -

தனி நபர்‌ மற்றும்‌ குழு விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ விண்ணப்பிப்பவர்கள்‌ மாவட்ட, மாநில அளவில்‌ குடியரசு / பாரதியார்‌ தின விளையாட்டுப்‌ போட்டிகள்‌ / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக்‌ கழகங்கள்‌ நடத்தும்‌ போட்டிகளில்‌ முதல்‌ மூன்று இடங்களில்‌ வெற்றி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌ (அல்லது) தமிழ்நாடு அணியில்‌ தேர்வு செய்யப்பட்டு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள்‌ / இந்திய பள்ளி விளையாட்டுக் ‌கூட்டமைப்பு / இந்திய விளையாட்டு அமைச்சகம்‌ நடத்தும்‌ தேசிய அளவிலானபோட்டிகளில்‌ கலந்து கொண்டவர்களும்‌, பன்னாட்டு அளவில்‌ அங்கீகாரம்‌ பெற்ற போட்டிகளில்‌ பதங்கங்கள்‌ இபற்றவர்கள்‌ மற்றும்‌ கலந்து கொண்டவர்கள்‌, மாநில, மாவட்ட அளவில்‌ முதலமைச்சர்‌ கோப்பை போட்டிகளில்‌ பதக்கம்‌ பெற்றவர்கள்‌ மற்றும்‌ கலந்துகொண்டவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதி ஆவார்கள்‌.