<p>சென்னையில் நேற்று இரவு முதல் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால், இன்று பள்ளி, கல்லூரிகள் சென்னையில் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p>
<p>இந்த சூழலில், சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். </p>