School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

3 weeks ago 2
ARTICLE AD

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Government Employees: அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. சாட்டையை சுழற்றிய ஐகோர்ட்!

இலவச பஸ் பாஸ்

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வகையில் எமிஸ் தளத்தில் உரிய விவரங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளி தலைமை ஆசிரியர்கள்

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு ஏதுவாக இதுவரை பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதியதாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் பேருந்து பயண அட்டை பெற விருப்பம், விருப்பமின்மை விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article