School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

2 weeks ago 3
ARTICLE AD

அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையை முறையாக நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியிட்ட தீர்ப்பின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார  மேலாண்மையை சிறப்பாக நடைமுறைப்படுத்த விரிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதாவது பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும். மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிப்பறைகள் தண்ணீர் வசதி

பள்ளிகளில் மாணவிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும். புதியதாக கட்டுப்படும் கழிப்பறைகளில் மாற்றுத்திறனாளி மாணவிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். போதிய தனிப்பாதுகாப்பு கொண்டதாகவும் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.சோப்பு மற்றும் தண்ணீருடன் கூடிய கை கழுவும் வசதிகள் எப்போதும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். கழிப்பறைகள் தினமும் முறையாக பராமரிக்கப்பட்டுத் தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள்

பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக, மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும். கழிப்பறைப் பகுதியிலேயே நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும். எந்திரங்கள் சாத்தியமில்லாத இடங்களில் உரிய அதிகாரம் பெற்ற நபர் மூலம் சானிட்டரி நாப்கின்கள் எளிதில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மைக்கான பகுதியை அமைத்துத் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். இதனை அப்பள்ளியின் ஆசிரியைகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கழிப்பறை அறையிலும் மூடக்கூடிய குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் செயல்பட ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவருக்குமே முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள்

பள்ளியில் கழிப்பறையில் தூய்மை, தண்ணீர், சோப்பு மற்றும் நாப்கின் இருப்பு ஆகியவற்றை இருப்பதை தலைமை ஆசிரியரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் உதவி மைய எண்களைத் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும்’எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Entire Article