SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

1 year ago 7
ARTICLE AD

பட்டியலின சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பட்டியலின சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பீலா திரிவேதி, கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வில் பீலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து விசிக உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

Read Entire Article