காலாண்டு விடுமுறையோடு ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை விடுமுறை வருவதால், 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் நவராத்திரி விழா தொடங்கிவிட்ட நிலையில், அதன் நிறைவாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வியாழன் அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

4 நாட்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை

அதேபோல அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜய தசமி (சரஸ்வதி பூஜை) மற்றும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி என்பதாலும் மொத்தம் நான்கு நாள்கள் விடுமுறை மாணவர்களுக்குக் கிடைக்க உள்ளது.

நடந்து வரும் காலாண்டுத் தேர்வு

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10அம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு செப்டம்பர் 25ஆம் வரை நடைபெற உள்ளது. அதேபோல, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 அன்று தேர்வு தொடங்கின.

செப்.26ஆம் தேதி வரை இவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை ஒரு வார காலத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் நவராத்திரி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளும் வர உள்ளன.

பொதுத் தேர்வுகள் எப்போது?

கடந்தாண்டு போலவே 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.