கள்ளக்குறிச்சியில் கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள க.மாமனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராபி. இவர் தனியார் கேஸ் கம்பெனி ஒன்றில் ஓட்டுநராக பணியாறி வருகிறார். அவருக்கு அம்மு என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதனிடைடே கடந்த மார்ச் 8ம் தேதி அந்தோணி ராபின் உடல் முழுக்க தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்ப பிரச்னை காரணமாக அந்தோணி ராபின் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவரது மனைவி அம்மு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்கொலை பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. ஆனால் அந்தோணி ராபினின் தாய் தனக்கு மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக மருமகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி உறவினர்களுடன் சேர்ந்து உடலை வாங்க மறுத்து சேலத்தில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அம்முவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் கம்பெனி பைக்கை வீட்டுக்கு எடுத்து வரும் அந்தோணி ராபினிடம் இருந்து அவரது நண்பர் ஒருவர் இரவில் பைக்கை பெற்றுச் செல்வார். இதனால் கம்பெனியில் கணக்கு காட்ட பாட்டிலில் முன்கூட்டியே பெட்ரோல் வாங்கி வைத்திருப்பார். இல்லாவிட்டால் பாட்டிலில் பைக்கில் உள்ள பெட்ரோலை எடுத்து விட்டு நண்பரை நிரப்ப சொல்லுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து அந்தோணி ராபின் தன் மீது ஊற்றி தீ வைத்தார். தான் கதவை திறந்து போவதற்குள் இப்படி நடந்து விட்டது என அம்மு தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர்கள் வீட்டு அருகே சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மதுபோதையில் வீட்டை விட்டு வெளியே வரும் அந்தோணி ராபின் மீது அம்மு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் இடம் பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை அம்மு ஒப்புக் கொண்டார்.

சென்னை கூடுவாஞ்சேரியில் காய்கறி கடை வைத்திருந்த அந்தோணி ரபைனை அதே கடையில் வேலை செய்த அம்மு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 8 மாதங்களுக்கு முன்பு க.மாமனேந்தல் கிராமத்தில் வந்து குடும்பத்தோடு குடியேறியுள்ளனர். அந்தோணி அங்குள்ள சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே அம்மு நடத்தை மீது அந்தோணி ராபினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 8ம் தேதி இரவு மதுபோதையில் வந்த கணவர் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி அம்மு தீ வைத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்முவை போலீசார் கைது செய்தனர்.