Salem Ring Road: சேலத்தை மாற்றப் போகும் புதிய திட்டம்... 45 கி.மீ புதிய ரிங் ரோடு... மகிழ்ச்சியில் மக்கள்

8 months ago 5
ARTICLE AD

சேலம் மாநகராட்சி நாளுக்கு நாள் பல்வேறு உள்கட்டமைப்பு வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் தொகையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சேலம் மாநகர பகுதியில் 10,83,054 பேர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சட்டப்பேரவையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசியதாவது, சேலம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், சேலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே வெளிவட்ட சாலையை விரைந்து அமைத்து கொடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் விமான நிலையம் தொடங்கி தாரமங்கலம், இளம்பிள்ளை, நடுவனேரி, காக்காபாளையம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் வழியாக மல்லூரில் இணைக்கும் வகையில் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இந்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையின் படி, வெளிவட்ட சாலை காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவார சாலை, திருப்பத்தூர், வாணியம்பாடி வழியாக சேலம் - உளுந்தூர்பேட்டை சாலை மின்னாம்பள்ளியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான, நிலை எடுப்பு, மதிப்பீடு, திட்டப் பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்னாம்பள்ளியிலிருந்து மல்லூர் செல்லும் பகுதியில் மலை அதிகமாக இருப்பதால், அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான சாத்திய கூறு இல்லை. ஆகவே மூன்று கட்டமாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டத்திற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை விரைந்து முடிப்பதற்காக ஒன்றிய அரசுக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

Read Entire Article