பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி தான் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றம் பற்றி சர்ச்சை கருத்து

திண்டுக்கலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த நடிகர் எஸ்.வி.சேகர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியல் தொடங்கி சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் வரை பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் பற்றிய கேள்விக்கு எஸ்.வி.சேகர் அளித்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அதாவது, “தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களையும், சட்டம் ஒழுங்கையும் ஒப்பீடாதீர்கள். பெண் குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். வெளியே கழிவறைக்கு சென்றால் கூட துணைக்கு ஒருவர் செல்ல வேண்டும். சுதந்திரம், பாதுகாப்பு என்பது வெவ்வேறானது. முதலில் நமக்கு பாதுகாப்பு தான் முக்கியம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 10 கோடி மக்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது நான்கு, ஐந்து பாலியல் குற்றங்கள் நடந்திருக்கும். இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் அந்த பெண் புதருக்கு பின் மறைந்து நின்றாள். அப்போது குற்றவாளி வந்தான் என சொன்னார்கள். அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் செல்ல வேண்டும். போலீஸ் எல்லா புதருக்குமா லைட் போட முடியும்? நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா வேலையும் எப்படி போலீசால் பார்க்க முடியும்” என தெரிவித்தார்.

யாரையும் குறிப்பாக இறந்து போனவர்களை பற்றி தவறாகபேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பொதுவாக பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/25aHQg3Trg

— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) March 26, 2026

குவிந்த கண்டனமும் - மன்னிப்பும்

எஸ்.வி.சேகரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்றது. பாடகி சின்மயி தொடங்கி பிரபலங்களும் அவருக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் தன்னுடைய பேச்சுக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “யாரையும் குறிப்பாக இறந்து போனவர்களை பற்றி தவறாக பேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பொதுவாக பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.