S Ve Sekar: திரைப்பட ஹீரோவையே மிஞ்சிட்டாரே... 75 வயதில் 26 வயது நடிகைக்கு ஜோடி; எஸ்.வி.சேகர் அட்ராசிட்டி !

8 months ago 7
ARTICLE AD

நாடக கலைஞரான எஸ் வி சேகர் 1974 ஆம் ஆண்டு தனது முதல் நாடகத்தை அரங்கேற்றினார். இதையடுத்து மோகம் படம் மூலமாக ஸ்டில் போட்டோகிராஃபராக சினிமாவில் அறிமுகமானார். நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் நடித்த எஸ்வி சேகர் இயக்குநர் கே பாலசந்தரின் இயக்கத்தில் வந்த 'வறுமையின் நிறம் சிவப்பு' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், குடும்பம் ஒரு கதம்பம், கோபுரங்கள் சாய்வதில்லை, மணல் கயிறு, உருவங்கள் மாறலாம், டௌரி கல்யாணம், தூங்காத கண்ணின்று ஒன்று, ஊருக்கு உபதேசம், ராஜா வீட்டு கண்ணுக்குட்டி, நாம், பூவே பூச்சூட வா, சிதம்பர ரகசியம், மிஸ்டர் பாரத், கோடை மழை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார்.

இந்த நிலையில் தான் தற்போது சீரியலில் நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் புதிய சீரியலின் புரோமோ வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

அந்த புரோமோ வீடியோவில் 26 வயதே ஆகும் இளம் சீரியல் நடிகை சோபனாவுக்கு தாலி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு எஸ் வி சேகர் சீரியலில் நடிக்கிறார். அந்த சீரியலுக்கு 'மீனாட்சி சுந்தரம்' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இது தொடர்பான புரோமோவில் ஏற்கனவே மகன், மகள், பேரன், பேத்தி என்று இருக்கும் போது யாருக்கும் தெரியாமல் இளம் பெண் ஒருவருக்கு கழுத்தில் தாலி கட்டும் எஸ் வி சேகர் வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு ஜோடி போடும் விக்ரம், கார்த்தி போன்ற நடிகர்களையே எஸ்.வி.சேகர் மிஞ்சி விட்டதாக கூறி வருகிறார்கள்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ள சோபனா, ஏற்கனவே விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'முத்தழகு' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள, 'பூங்காற்று திரும்புமா' என்கிற சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article